பாவக காரகங்கள்



                      பாவகாரகங்கள்
லக்னபாவம் :
             ஜாதகரின் தனித்தன்மை , கெளரவம்,  அந்தஸ்த்து ,சுயமுயர்ச்சி,சுயசிந்தனை,ஆரோக்கியம்,
உடல்வாகு,தோற்றம்,நிர்வாகத்திறன்,வெற்றி,தோல்வி
நோய் எதிர்ப்புதிறன்,  பணத்தைவிட கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், பணத்தை இழந்து கெளரவம் பெறுதல்,அரசியல் தலைவர்கள், சங்கதலைவர்கள்,அரசாங்க
தொடர்புகள் போன்றவை ஆகும்,
உடல் உறுப்புகள் தலைபகுதி ஆகும், மூளை,நெற்றி முக்கிய பகுதி ஆகும்
ஜாதகத்தில் பதினோரு பாவம் நல்லா இருந்தாலும் லக்னபாவம் கெட்டுவிட்டால் மற்ற பாவங்களின் பலனை
ஜாதகர் அனுபவிக்கமுடியாது .





இரண்டாம் பாவம் :
                  உடல் உறுப்பில் இரண்டாம்பாவம் முகத்தை குறிக்கும் முக்கியமாக கண்,பற்கள்,பேச்சு,நாக்கு, மூக்கு,வாய்,தாடை,தொண்டை போன்றவற்றை குறிக்கும்.
இது தனஸ்தானம் என்பதால் கையிருப்பு பணத்தையும்,
எளிதில் பணமாக்ககூடிய தங்க அணிகலன்கள்,உலோகம், வெள்ளிஅணிகலன்கள்,போன்றவற்றையும் இரண்டாம்பாவம் குறிக்கும்,
மூன்றாம்பாவம் :
                உடல் உறுப்பு காது,தோள்பட்டை,கழுத்து எலும்பு, நரம்புமண்டலம்,போன்றவைகள் ஆகும்.
தகவல் தொடர்புகள்,தைரியம்,தன்னம்பிக்கை,விடாமுயற்ச்சி, மனஉறுதி போன்றவைகள் , சிருதூரபிராயணம்,இடமாற்றம், சொத்துக்களை இழத்தல்,விற்பனை செய்தல்,டாக்குமென்ட்ரி, போன்றவைகள்,  இளையசகோதரன்,மாமனாரையும்,தந்தையின் சகோதரர்கள் போன்றவர்களையும் குறிக்கும் , குறுகிய பயணம்,சாலைகள், சைக்கிள்,பஸ்,கடிதம்,தபால்நிலையம்,காசோலைகள்,தூதுசெல்லுதல்,பத்திரிக்கை,விளம்பரம்,கையெழுத்து,குத்தகை,வதந்திகள்,மனக்குழப்பம்,புத்திபெதளிப்பு,போன்றவை மூன்றாம்பாவம் காரகங்கள் ஆகும்.
நான்காம்பாவம் :
                உடல் பகுதியில் உற்பத்தி செய்யகூடிய நுரையீரல் ,சிறுநீரகம்போன்றவைகள் ஆகும்.
அசையா சொத்து (நிலம்), அசையும் சொத்து (வாகனம் ), ஜாதகரின் அணைத்து சொந்தம் ,சொந்த ஊர், சொந்த இடம், போன்றவைகள் நான்காம்பாவ காரகங்கள் ஆகும்,
(காமம்,காதல்,அழகு,கவர்ச்சி,இவையெல்லாம் நான்காம்பாவ எதிரிகள் ஆகும். மற்றும் வெளிநாடு,ஆண்மிகம்,ஆராய்ச்சி போன்றவை ஆகும் )
வெளிநாடு செல்லாமல் சொந்த ஊரிலேயே தொழில் பண்ணுவார் ,தேவைக்கு அதிகமான கை இருப்பு பணம், புதையல்,எப்போதும் ஒரேமாதிரியான உற்பத்தி செய்யகூடிய தொழில் போன்றவை ஆகும்,
பற்றி அறிய நான்காம் பாவம் ஆகும்.ஆரம்ப கல்வியை பற்றி அறிய நான்காம் பாவம்.தாயை.






ஐந்தாம்பாவம் :
               உடல் உறுப்பு இதயம்,முதுகுபகுதி,பாலியல் ஹார்மோன்கள்,புத்திர உற்பத்திக்கான உயிர் அணுக்கள் போன்றவை ஐந்தாம் பாவ காரகங்கள் ஆகும்.
காதல்,கவர்ச்சி,காமம்,குழந்தை,மகிட்ச்சி,ஆண்மை மற்றும் பெண்மை,பொழுதுபோக்கு,உல்லாசம்,சிற்றின்பம்,விளையாட்டு,கமிஷன்கள்,கவிதை,சோம்பேறித்தனம்,ஆரோக்கியம்,கேளிக்கை,நாடகம்,சினிமா,மந்திரம்,ஆண்மிகம்,புண்ணியம்,அன்னதானம்,ஜோதிடம்,எல்லோரிடத்திலும் அன்புடன் இருத்தல் போன்றவை ஆகும்
ஆறாம்பாவம் :
              உடல் உறுப்பு வயறு இரைப்பை,கல்லீரல், போன்றவைகள் ஆறாம்பாவம் காரகங்கள் ஆகும்.
உணவு,நோய்,மருந்து,கடன்,அடிமை வேலை,வழக்கு,வெற்றி, உடை,அணிகலன்கள்,செல்ல பிராணிகள்,மறைமுக எதிரி,
மாதசம்பளம்,கஞ்சத்தனம்,பேராசை,மற்றவர்கள் பொருளை அபகரித்தல்,தற்காலிக பணவரவு,சிறைச்சாலை, போன்றவைகள் ஆகும்.


ஏழாம்பாவம் :
             உடலில் அடிவயறு,நடுப்பகுதி,தொப்புள், சிறுநீரகம், கர்ப்பப்பை போன்றவைகள் ஏழாம்பாவ காரகங்கள் ஆகும். திருமணவாழ்க்கை பற்றி அறிய ,மனைவியை பற்றி அறிய , தொழில் பற்றி அறிய, ஜாதகருக்கு சமமான நபர்களையும், தொழில் பார்ட்னர்ஷிப் பற்றி அறிய , பொதுமக்கள் ஆதரவு,வியாபாரம்,இரண்டாவது குழந்தை பற்றி அறியவும்
எட்டாம்பாவம் :
               ஆயுளை பற்றி அறிய , உடல் கூற்றில் மர்மஸ்தானம் பகுதியாகும்
எட்டாம்பாவம் வலி,வேதனை,துரோகம்,துக்கம்,துரதிழ்டம், போராட்டம்,அவமானம்,விபத்து,கெட்டபெயர்,தடங்கள், எதையும் எளிதில் பெறமுடியாமை,  மரணம்,  எதிரி தொல்லைகள், சேதம் அடைதல், தாழ்ந்தநிலை, இளமையில் தந்தையை இழத்தல், ஒரேநேரத்தில் பலநோய்கள்,





ஒன்பதாம்பாவம் :
                 உடல் உறுப்பில் இடுப்பு,புட்டம்,  மலத்துவாரம் போன்றவற்றை குறிக்கும்.
ஆண்மிகம்,நீதி,நேர்மை,நீதிமன்றம்,தெய்வநம்பிக்கை, விசுவாசம்,கருணை,ஆராய்ச்சி,உயர்கல்வி,மதநம்பிக்கை, தானம்,தருமம்,சுயகௌரவம்,லாட்டரியில் பணம் கிடைப்பது, பங்குசந்தை,வெளிநாடு,ஆவியுலகம்,கம்பி இல்லா தந்தி, வெளிநாட்டு ஏற்றுமதி,இறக்குமதி, பரம்பரையாக உள்ளது, பொதுமக்கள் பணம்,பூர்வபுண்ணியம்,
பத்தாம்பாவம் :
              உடல் உறுப்பு தொடைப்பகுதி ஆகும் கிட்னி, குடல் போன்றவையும் பத்தாம்பாவம் ஆகும்.
தொழில் அந்தஸ்த்து , ஜீவனாம்சம், நிர்வாகத்திறன், அரசாங்கவெகுமதி , வாழ்க்கைதுணை சொத்து, இளையசகோதரன்க்கு ஆபத்து, மூத்தசகொதரனுக்கு விரயம், சங்கங்களுக்கு தலைமை தாங்குதல்,தத்துகுழந்தை, மாமியார், குழந்தைக்கு நோய் பற்றிய விபரம், ஒரு பொருளை உற்பத்திசெய்தல்,   

              

  பதினோராம் பாவம் :    
                   முழங்கால்,மற்றும் மூட்டுகளையும், உடலில் உள்ள வைட்டமின்களையும் பதினோராம் பாவம் குறிக்கும். அதீதமகிட்ச்சியை கொண்டது பதிநோராம்பாவம்
வெற்றி,லாபம்,எதிலும் முதலீடு செய்யாமல் பணம்பெருவது,
எப்போதும் சுசுருப்பாக இருத்தல், புரியாத இரகசியங்களையும் கண்டறிந்து சித்தி பெறுதல்.மற்றவருடன் கலகலப்பாக பேசி மகிட்ச்சியுடன் இருத்தல் ஆகியவை ஆகும்.நீண்டகால நண்பர்களை பதினோராம் பாவம் குறிக்கும்.
பணிரண்டாம்பாவம் :  
                    உடலில் கால் பாதத்தையும், உடலில் இருந்து வெளியேறும் கழிவு பொருட்களையும் பனிரண்டாம் பாவம் குறிக்கும்.
ஜாதகர் செயலற்ற நிலையை கொடுப்பது பனிரண்டாம் பாவம்,மறைந்து வாழ்தல், வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்தல்,மோட்ச்சம்,ஜாதகர் தன் சொந்த தொழிலை செய்யாமல் நிம்மதியாக இருந்துகொண்டு இரண்டாவது தொழிலை செய்தல்,ரகசிய எதிரிகள்,ரகசிய சதிவேலைகள், அரசியல் கொலைகள்,புரியாத புதிர்,

மூளை செயல் இழத்தல்
தாழ்வு மனப்பான்மை
தனிமை வாடுதல்
ஜாதகர் எதையுமே செய்யமுடியாதவராக இருத்தல்
சதிவலை ஈடுபடுதல்
மறைந்து வாழ்தல்
முற்று பெறுதல் 
அதாவது ஒரு உறுப்பு நோய் வந்தால் அந்த உறுப்பு முற்றிலும் கெட்டுவிடுதல் 
தொழில்ச்தானம் பனிரண்டாம் பாவம் தொடர்பு பெற்றால்
தொழில் முழுவதுமாக முடங்குதல்  போன்றவைகள் பனிரண்டாம் பாவ காரகங்கள் ஆகும்.

                                
                  
                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக